அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கிடுகிடு விலை உயர்வு ஏழை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
