தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 74 -வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது அதன்படி திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் ,மாவட்டச் செயலாளரும்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் தலைமையில் மணிகண்டம்,அந்த நல்லூர்,மணப்பாறை,மருங்காபுரி உள்பட அனைத்து ஒன்றியங்கள்,நகரங்கள்,பேரூராட்சிகள்,கிராம கிளை கழகங்கள் என அனைத்து பகுதிகளிலும் தேமுதிக கொடியேற்றி, இனிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.அதன் ஒரு பகுதியாக விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா திருவரங்கத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவரங்கம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவிமரியாதை செலுத்தப்பட்டது பின்னர் மாவட்ட செயலாளர் ஆர்.பாரதிதாசன் தலைமையில் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மாநில தொழிற்சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் முல்லை சந்திரசேகர் , மாவட்ட கழகவைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் பி அர்ஜுன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சதீஷ்குமார் , புகழேந்தி பாலாஜி பாஸ்கர் பீட்டர் செல்வகுமார் சுரேஷ் பாஸ்கர் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
