சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பணிகளை மேற்கொள்ள அரசு 7 அமைச்சர்களைப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூர், மணலி மண்டலங்களுக்கு ரமேஷ், மாதவரம், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு லோகேஷ் தமிழ்ச்செல்வன், ராயபுரம், திருவிக நகருக்கு அருண்ராஜ், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டைக்கு விஜய் பாலாஜி, கோடம்பாக்கம், வளசவரவாக்கத்திற்கு டி.கே.பிரபு, ஆலந்தூர், அடையாருக்கு விஜய் தமிழன் பார்த்திபன், பெருங்குடி, சோழிங்கநல்லூருக்கு க.விக்னேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
