நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தவித்து வருகின்றனர்.
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக, முக்திநாத் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கும் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கும் பயணமாகியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பயணிகள், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் நடுவழியில் தவித்து வருகின்றனர்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யவும் இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 57 பயணிகளும் கும்பகோணம் சூப்பர் யாத்திர ஏஜென்சி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கடந்த 23ஆம் தேதி மூன்று வேன்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நேபாளம் சீனா எல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது வெள்ளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வேன்களும் சிக்கி உள்ளன.
அதில் ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
தற்போது சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற ஏஜென்சியை அவர்களது உறவினர்கள் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.
சிவரஞ்சனி,
கற்பகம்,
மாறன்,
சாந்தி,
முத்து குமரேசன், நவோ கபிர்தாஸ், விஜய புவனேஸ்வரி, மைதிலி, தியாகராஜன்,
கிருப ஹரி, வள்ளிநாயகி, சத்தியா,
புஷ்பராணி, கனகசபை,
ராதை,
ரத்தினகுமார், பூங்குழலி, பழனியப்பன், மணிமேகலை, முருகானந்தம்
இவர்கள் 20 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
