அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.
குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனம் நேபாளத்திற்கு
ஆன்மிக சுற்றுலா சென்ற மேலும் 49 தமிழர்கள் மாயமாகி உள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
தகவல் தொடர்பு துண்டிப்பு – மாயமானோர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்பு.
கும்பகோணத்தில் இருந்த சென்ற 36 பேர் ஏற்கனவே மாயம் என தகவல் வெளியானது.
மாயமானோர் குறித்து அரசு சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது- அமைச்சர் ராஜ்மோகன்.
