நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக அதிகரித்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருவெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படும் 320 இந்தியர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மீட்புப் பணிக்காக 11 பேர் கொண்ட இந்திய குழு காத்மாண்டு சென்றடைந்தது. இதனிடையே வெள்ளத்தில் இருந்து தப்பிய சுமார் ஒரு லட்சம் பேர் உணவு, குடிநீரின்றி தவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய 4,451 பேர் தற்போது வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என நேபாள பிரதமர் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துஞ்சே, திரிசூலி, திமுரே மற்றும் சியாப்ருபேசி போன்ற கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 517 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.
நேபாள ராணுவம் மற்றும் போலீஸ் படையைச் சேர்ந்த 15,431-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையிலும், அங்கு சூழ்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.
