அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வண்டல் மண் அனுமதிக்காக, 2 மாதங்களில் ஜிபே மூலம் ரூ.7.24 லட்சம் லஞ்சம் பரிமாறப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.19,000 கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் தேவகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
