பால் வேன் டிரைவரை தாக்கி பணம் கொள்ளை… 3 பேர் கைது; ஒருவர் தப்பி ஓட்டம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 38). இவர் பழைய குட்ஷெட்ரோடு பகுதியில் உள்ள ஒரு பால் விற்பனை நிலையத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தெப்பக்குளம் ஆர்ச் பகுதியில் வேனை ஓட்டி வந்து கொண்டிருந்தார் .அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் ஏன் எனது மோட்டார் சைக்கிளை இடித்தாய் என்று முரளியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அவர் மறுக்கவேஅவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த ஒரு செல்போன் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ரூபாய் 65 ஆயிரம் ஆகியவை பறித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அரியமங்கலம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் வயது 21, மேல அம்பிகாபுரம் பகுதியில் சேர்ந்த ஹரிஹரன் 20, சண்முக பிரியன் 24 ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கதிர்வேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கணவன் இறந்த சோகத்தில் மனைவி தீக்குளித்து சாவு
திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 27). இவர் சேலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் .இந்நிலையில கணவனை பிரிந்து கடந்த இரண்டு வருடமாக தனியாக வசித்து வந்த இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராஜ்குமார் என்பவர் அறிமுகம் ஆனார். இதனையடுத்து இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு திருவானைக்காவல் பகுதியில் வசித்து வந்தனர். எடுத்து கடந்த 24ஆம் தேதி ராஜ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவிர்த்தியில் இருந்து வந்த சரஸ்வதி டீசலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பெயரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50) .இவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து செந்தில்குமார் பிரியாவை விவாகரத்து செய்து ஸ்ரீரங்கம் சத்திரவீதி பட்டாபிராமன் தெருவில் தனியாக வசித்து வந்தார். கடந்த 28ஆம் தேதி சில நாட்களாக செந்தில்குமாரின் வீடு பூட்டி இருந்ததை பார்த்தஅக்கம் பக்கத்தினர் இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது செந்தில்குமார் அழகிய நிலையில் பிணமாக கடந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
பூ வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 29). திருமணம் ஆகாத இவர் தனது தந்தையுடன் தேவி தெருவில் பூக்கடை நடத்தி வந்தார். மதுக்கு அடிமையான இவர் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது வீட்டில் ஹரிகரன் தூக்கு போட்டு கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஹரிஹரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை அருகில் ஆண் சடலம்…
திருச்சி – கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ண பிரியாவுக்கு தகவல் கிடைத்தது .இதுகுறித்து அவர் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரியிடம் ஆன்லைனில் ரூ 1லட்சம் மோசடி
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்தவர் அசோக்குமார் ( வயது 40). இவர் மதுரை ரோட்டில் உள்ள ராஜா பஸ் நிறுத்தம் அருகே மின்சாரம் மற்றும் பேட்டரி மூலம்இயங்கும் கருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் .கடந்தஜூன் மாதம் 24ஆம் தேதி இவர் தனது செல்போனில் முகநூல் கணக்கே பயன்படுத்திக் கொண்டிருந்தபோது மின்சாரம் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் கருவிகள் விற்பனை செய்வது போன்றவிளம்பரம் ஒன்று வந்துள்ளது.அதில் இருந்த வாட்ஸ் அப் பெண்ணை தொடர்பு கொண்ட அசோக்குமார் இது குறித்து பேசி உள்ளார். அப்போதுஅதில் பேசிய அடையாளம் தெரியாத ஒரு நபர் நாங்கள்நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 100 முதல் 200 வரை விலை குறைவாக தருவதாக கூறினார். இதனை நம்பிய அசோக்குமார் அவருக்கு தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 760 ரூபாயை வெவ்வேறு தவணையில் அனுப்பி உள்ளார். பின்னர் பணத்தை செலுத்தி விட்டு காத்திருந்த அவருக்கு எந்த ஒரு பொருள்களும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
