விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், வேலை வாய்ப்பு உருவாக்கிட வேண்டும் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தழுவிய பிரச்சார இயக்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்றது மார்க்சிஸ்ட்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆகஸ்ட் 26 -ந் தேதியில் இருந்து 31 -ந் தேதி வரை மக்களை வீடுகள்தோறும் வீதிகள் தோறும் சந்தித்து பிரச்சாரம் செய்து, அந்தந்த பகுதி மக்களுடைய குறைபாடுகளை கண்டறிவது என்ற அடிப்படையில் தமிழக முழுவதும் நடக்கக்கூடிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தொழிற்சங்க கிளைகளின் சார்பாக பிரச்சாரம் நடைபெற்றது சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் பொன்மலை சிபிஎம் பகுதி செயலாளர் விஜயேந்திரன் போக்குவரத்து சங்கத்தின் மாநில தலைவர் எஸ். அருள்தால்,அருண் மாணிக்கம், மருந்து விற்பனை பிரதி சங்கத்தின் தலைவர் அருண் இனியன் ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் சீனிவாசன் மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் சேகர் மற்றும் தொழிற்சங்க அரங்கத் தோழர்கள் சிபிம் மாவட்ட குழு உறுப்பினர் ஜோன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்
