அதிமுகவை அழிவின் பாதைக்கு கொண்டு சென்றது மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார்” என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கான பணிகளை ஆர்பி உதயகுமார் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லை, சின்னம்மாவை முதல்வராக்குங்கள்’ என முதலில் கூறியதும் ஆர்பி உதயகுமார் தான் என குற்றம்சாட்டினார். இன்னும் 6 மாதங்களில் ‘இபிஎஸ் தேவையில்லை, நானே போதும்’ என அவரே கூறுவார்” என்றார்.
