நேபாளத்தில் ஏற்கனவே பெருவெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிசூலி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏற்கனவே நடைபெற்று வரும் மீட்புப் பணிகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. நேபாள பெருவெள்ளத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
