பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இருந்து தந்தை பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தைத் தமிழக அரசு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இப்பெயர்கள் நீக்கப்பட்டதைச் சாதாரண தவறாகப் பார்க்க முடியாது என்றும், திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பெரியார், அம்பேத்கர், நேரு பெயர் நீக்கம்.. சிபிஐ கண்டனம்
