தாம்பரம் அருகே பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் அவருடைய கழுத்தை அறுத்ததுடன் , தன்னுடைய கழுத்தையும் அறுத்து கொண்டது பரபரப்பு ஏற்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிடலப்பாக்கம் சோமசுந்தரம் தெருவை சேர்ந்தவர்

கல்லூரி மாணவர் சிவா (19) பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்,
இன்று பிற்பகல் தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்ற சிவா வீட்டில் இருந்த உமா என்ற பெண்ணிடம் தனக்கு மயக்கம் வருவதால் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அப்போது அந்த பெண் தண்ணீர் கொடுக்கபதற்காக வந்த போது திடிரென பாய்ந்த சிவா அவரின் கழுத்தில் இருந்து தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்,
இதனால் அதிர்ச்சியடைந்த உமா கூச்சலிட்டதால் திடிரென தன் வைத்திருந்த கத்தியால் அவரின் கழுத்தை அறுத்ததுடன் தன்னுடைய கழுத்தையும் அறுத்துள்ளார்
இதனை கண்டு அக்கம்பக்கத்தினர் உமாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மேலும் கழுத்தில் பலத்த காயமடைந்த சிவா மனநலம் பாதிக்கபட்டவர் போல் நடித்துள்ளார்.
அவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிட்லப்பாக்கம் போலீசார் பொற்றோரிடம் நடத்திய விசார்னையில் சிவா மனநலம் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
,மேலும் இச்சம்வம் குறித்து உமாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டபகலில் கல்லூரி மாணவர் நடத்திய இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
