Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலவச பஸ் பயண திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

அரசு புறநகர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்- திட்டத்தை மறுபரிசீலனை செய்ய சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை!

தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அரசு புறநகர் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, திருச்சி மத்திய மண்டல சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள் நல சங்கத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தினர், அரசு புறநகர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பால் தனியார் பேருந்து துறையைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் வாகன பராமரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும், தனியார் பேருந்துகளின் வருவாய் குறையும் பட்சத்தில், அதனைச் சார்ந்து பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என அவர்கள் கூறினர். எனவே, தனியார் பேருந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று வழிமுறைகளை அரசு ஏற்படுத்தி, மகளிர் இலவச பயணத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

error: Content is protected !!