நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய வங்கி லாக்கர், சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது. லாக்கரில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே வங்கி ஊழியர்கள், மீட்புப் பணியாளர்கள் இணைந்து லாக்கரை பத்திரமாக மீட்டுள்ளனர். முன்னதாக, இதேபோல் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து பணம் எடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
