கால தாமதமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் அளிக்காது அதனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
தூத்துக்குடியில் கப்பல் தளம் கட்டுவதால் உப்பளம் தொழில் மிகவும் பாதிப்பு அடையும் அதனால் அரசு அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமைச் செயலகத்தில் பேட்டி
சட்டப்பேரவையில் கதர் மற்றும் கைத்தறி மானிய கோரிக்கையில் பங்கேற்று பேசிய பின்பு சட்டப்பேரவை வளாகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,
இன்றைய மானிய கோரிக்கையில் மிக முக்கியமான நெசவாளர் பிரச்சனையை குறிப்பிட்டு உள்ளோம்… கதர் ஆடையை அனைவரும் அணிய வேண்டும். வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையை உடுத்தி வாழ்ந்தவர் கேப்டன்…
மேலும் விருத்தாச்சலம் தொகுதி பிரச்சனை குறித்து பேசி உள்ளேன். விவசாயிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நெசவுக்கு கொடுக்க வேண்டும்,அவை நம் இரு கண்கள் போல என தெரிவித்த அவர்,
ஏற்கெனவே நெய்யப்பட்ட நெசவு ஸ்டாக் உள்ளது,புதிய ரகம் வருவதால் அதனையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடியில் கப்பல் தளம் கட்டுவதால் உப்பளம் தொழில் பாதிப்பு அடைய கூடாது,அதனால் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்…
மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா,
காலதாமதமாக மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டு உள்ளது.சம்பா, குறுவை சாகுபடி முடிந்துள்ளதால் விவசாயிகளுக்கு பயனளிக்கும் முழு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.
