Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காப்பர் ஒயர் திருட்டு… தீயில் டூவீலர் சேதம்… திருச்சி க்ரைம்

காப்பர் ஒயர் திருட்டு-தீயில் டூவீலர் சேதம்...திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கத்தில் டூவீலர் தீயில் சேதம்

ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு ஜெ ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் நேற்று தனது வீட்டுக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்து முழுவதும் சேதமாகி கிடந்தது. இந்த சம்பவம் குறித்து செந்தில்குமார் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீட்டில் அறையில் இறந்து கிடந்த நபர்

திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் (52) இவருக்கு திருமணம் ஆகி பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அசோக் குமார் கடந்த 5 வருட காலமாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம். மனைவி பிரியதர்ஷினிதாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த அசோக் குமார் அறையில் இறந்து கிடந்த ரர். பிறகு வீட்டுக்கு வந்து பார்த்த பிரியதர்ஷினி கணவர் அசோக்குமார் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக் குமார் இறந்ததற்கான காரணம் என்ன? எப்படி அவர் இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அசோக் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும்.

வீட்டில் இருந்த காப்பர் வயர் திருட்டு

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கணபதி நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (49) இவருடைய வீட்டிற்கு பின்புறம் இருந்த காப்பர் வயர் திருட்டு போனது. இதனை மர்ம ஆசாமி ஒருவர் திருடியதாக தெரிகிறது. இதுகுறித்து சந்தோஷ் அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கு கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பெயர் காளிமுத்து (26) சோமர்சம்பேட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய பொழுது காளிமுத்து தான் காப்பர் வயரை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் காளிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ காப்பர் வயரை பறிமுதல் செய்துள்ளனர்.

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.700 கிலோ குட்காவை பறிமுதல்

திருச்சி ரெயில்வே போலீசார் சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், போலீசார் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை, ஹவுராவில் இருந்து திருச்சி வரை செல்லும் வண்டியில் , தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் ஏசி பெட்டியில் ஒரு இருக்கைக்குக் அடியில் நீல நிற சாக்கு பை இருந்ததை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தன, அதை கொண்டு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முஹமது சகாதத் ஹீசைன் என்பவரின் மகன்,முஹமது தவ்ஸ்ப் (வயது 29) என்பவரை விசாரனை செய்ததில் அவர் ஹவுராவிலிருந்து மதுரை கொண்டு செல்வதற்காக குட்காவை கடத்தி வந்தது தெரிய வந்தது
அதன் எடை 8.700 கிலோ கிராம் . பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் முஹமது தவ்ஸ்ப் நிலையம் அழைத்து சென்று ஆஜர் படுத்தப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரி அன்புச்செல்வனிடம் ஒப்படைத்து பின்பு அவர்களால் ரூபாய் 25,000/- அபராதம் விதிக்கப்பட்டது

ரவுடி மனைவியை திட்டிய தனியார் நிறுவன ஊழியர் மீது பயங்கர தாக்குதல்

திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் வயது 36. இவர் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவன குடோனில் வேலை பார்த்து வருகிறார். இதே குடோனில் திருச்சி பெரிய கருப்பூர் குடி தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி குணசேகரனின் மனைவி தீபிகா அங்கு பணியாற்றி வருகிறார். அப்போது லோடு இறக்கி கொண்டிருந்தபோது ஒரு பார்சல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பட்டது இதைப் பார்த்த குணசேகரனின் மனைவி சிரித்துள்ளார் அப்போது வசந்த் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது உடனே தீபிகா தனது கணவரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்தார் இதனால் ஆத்திரமடைந்த ரவுடி குணசேகரன் தனது நண்பர் சதீஷ்குமார் ஆகியோருடன் குடோனுக்கு வந்து
மரக்கட்டையால் வசந்தை தாக்கி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினர்.
பின்னர் இது பற்றி வசந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் குணசேகரன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!