ஒடிசாவில் இறுதி சடங்கு செய்த ஒரே மாதத்தில் இறந்தவர் உயிருடன் திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. மனநிலை சரியில்லாததாக கூறப்படும் நாயக்(29) சமீபத்தில் வீட்டை விட்டு மாயமானார். இந்நிலையில், அழுகிய நிலையில் கிடந்த ஒரு அடையாளம் தெரியாத உடலை நாயக் என நினைத்து அவரது குடும்பத்திடம் போலீஸ் ஒப்படைத்தது. அந்த உடலுக்கு இறுதி சடங்கும் செய்யப்பட்ட நிலையில் உண்மையில் அது யாரின் சடலம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
