சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் தனியார் பள்ளி பேருந்து மோதி தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் நேற்று சென்ற தேவி மற்றும் அவரது மகள் சுவாதி மீது பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடுத்த மாதம் சுவாதிக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
