தஞ்சை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து நழிவடைந்து வரும் மண்பானை தொழிலாளர்கள்
அட்டையில் செய்யும் பிள்ளையார் விற்பனைக்கு வந்துள்ளதால் களிமண் பிள்ளையார் செய்யும்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக, பல தலைமுறைகளாக ஒரு எட்டு குடும்பத்தினர் இந்த மண் பானை தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஒரு 40 ஆண்டு காலமாக களிமண்ணில் செய்யப்படும் பிள்ளையார் அதிக அளவில் ஆர்டர் வாங்கி பிள்ளையார் செய்து கொடுத்து விநாயகர் சதுர்த்தி நாட்களில் மிகவும் பரபரப்பாக இருந்த தங்களது வாழ்க்கை முறை கடந்த சில வருடங்களாக வாழ்வாதாரத்தை தொலைத்து வாழ வழி இல்லாமல் போனதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ரசாயன பிள்ளையார் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருந்தும், அட்டைகளில், சுண்ணாம்புகளில் அழகிய பல உருவங்களில் பிள்ளையார் செய்து, விஷத்தன்மையுள்ள ரசாயன வண்ணங்களில் வண்ணம் தீட்டி விற்பனை செய்யப்படுவதை பெருமளவில் பொதுமக்கள் விரும்பி வாங்குவதால், பாரம்பரிய முறைப்படி பல காலங்களாக களிமண்ணில் எந்தவித ரசாயனமும் கலப்பில்லாமல், ஆச்சாரங்கள் மாறாமல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல், கடல், ஏரி, குளங்களில் கரைக்கப்படும் பொழுது அங்கே உள்ள மீன்கள் மற்றும் மற்ற உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்து பார்த்து செய்யப்படும் களிமண் பிள்ளையார் மீது பொதுமக்களுக்கு ஆர்வம் குறைந்ததால், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்று விட்டதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே தமிழகஅ ரசு தனி கவனம் எடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் .
