கரூர் மாவட்டம் தென்னிலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் மீது, 3 புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தி செல்போன், வாக்கி டாக்கி, வாகனத்தை பறிமுதல் செய்த சம்பவம் 3பேரை கைது செய்து போலீசார் விசாரணை.
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள அரசு மதுபானக் கடை பகுதியில், நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் தென்னிலை காவலர் கணேசன் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் 3 புலம்பெயர் தொழிலாளர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவலர் கணேசன் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து காவலர் கணேசனின் சட்டையை கழற்றி, அவரது செல்போனை பறித்ததுடன், காவலரின் வாக்கிடாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பின்னர் 3 பேரும் காவலரின் இருசக்கர வாகனத்திலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த காவலர் கணேசன் அளித்த தகவலின் பேரில், தென்னிலை மற்றும் பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் நேரத்தை கடந்து மது அருந்தி கொண்டிருந்த நபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரை கேள்வி கேட்டதற்கு தாக்கி அவரிடம் இருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
