Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

திருச்சி தில்லைநகரில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகின்றனர்.

திருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்புடையதாகக் கூறப்படும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் அடையாறு, திருவான்மியூர், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கே.என். நேருவின் இல்லத்திலும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள

ரவிச்சந்திரனின் டிவிஎச் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்.

பல்வேறு நிறுவனங்களை மிரட்டி சட்டவிரோதமாக பார்ட்டி ஃபண்ட் பெற்றதாக எழுந்த

குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு அதிகாரிகள்

மற்றும் ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியதாக அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்.

இதனிடையே, கே.என். நேருவின் இல்லத்தின் முன்பு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் என 19க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!