Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்ணின் லேப்டாப் பையை பத்திரமாக ஒப்படைத்த ஸ்விக்கி ஊழியர்!

பெண்ணின் லேப்டாப் பையை பத்திரமாக ஒப்படைத்த ஸ்விக்கி ஊழியர்!

லேப்டாப்புடன் தொலைந்த பெண்ணின் கைப்பை மீட்டுக்கொடுத்த ஸ்வீகி ஊழியர்!” – இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நெகிழ்ச்சிப் பகிர்வு செய்த கோவை பெண்!

போலீஸ் ஸ்டேஷன் அலட்சியமும்… நேர்மையான டெலிவரி பாயின் உதவியும்: வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

​ கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது லேப்டாப்புடன் தொலைந்து போன தனது கைப்பையை, சோகத்துடன் தேடிய பெண்ணுக்கு நேர்மையான டெலிவரி ஊழியர் ஒருவரால் அந்தப் பைக்கை மீண்டும் கிடைத்தது குறித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களைப் பெற்று வைரலாகி வருகிறது.

கோவையில் இருந்து தனது அக்காவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்ற இளம் பெண் ஒருவர், தான் வைத்து இருந்த கைப்பையை வழியில் எதிர்பாராத விதமாகத் தவற விட்டு உள்ளார். வீட்டிற்கு சென்ற பின்னர் கைப்பை, குறிப்பாக அதனுள் அலுவலக லேப்டாப் மற்றும் முக்கியமான பொருட்கள் இருந்ததை உணர்ந்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

​உடனே அவர்கள் தாங்கள் வந்த காய்கறிச் சந்தை சாலை முழுவதும் தேடியும் கைப்பை எங்குமே காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள், அருகில் இருந்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முயன்று உள்ளனர். ஆனால், காவல்துறையினரோ “இந்த இடம் எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கிடையாது; எனவே நீங்கள் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்குச் சென்று புகார்ளியுங்கள்” என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி உள்ளனர்.

காவல் நிலையங்களின் அலைக்கழிப்பு மற்றும் லேப்டாப் தொலைந்துவிட்ட சோகத்துடன் அவர்கள் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகச் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் இருந்து அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு வந்து உள்ளது.

காவல்துறையினர், “நீங்கள் தொலைத்த கைப்பை எங்கள் காவல் நிலையத்தில் பத்திரமாக உள்ளது, வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்து உள்ளனர்.

உடனடியாகச் சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு விரைந்து சென்ற அந்தப் பெண், தனது பையைத் திறந்து பார்த்த போது ஆச்சரியத்தின் உச்சத்திற்குச் சென்றார். பைக்குள் இருந்த அலுவலக லேப்டாப் மற்றும் அனைத்துப் பொருட்களும் எந்தவொரு சேதமும் இன்றி அப்படியே பத்திரமாக இருந்தன.
​இது எப்படி சாத்தியமானது என்று காவல் துறையினரிடம் கேட்டபோது, ‘Zomato / Swiggy’ உணவு விநியோக நிறுவனத்தில் பணி புரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், சாலையில் கிடந்த இந்தக் கைப்பையை எடுத்துச் சென்று பாதுகாப்பாகச் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தனது தொலைந்த கைப்பைக்குள், இருந்த விலை உயர்ந்த லேப்டாப்புக்கும் உயிர் கொடுத்து உதவிய அந்த நேர்மையான டெலிவரி ஊழியருக்கும், உடனடியாகத் தகவல் தெரிவித்து உதவிய காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்து அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

​”ஒருபுறம் காவல் நிலையங்களின் அலைக்கழிப்பு சோகத்தைத் தந்தாலும், மறுபுறம் துயரத்தில் இருந்த தனக்கு உதவிய அந்த ஸ்வீகி ஊழியரின் நேர்மை மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருவதுடன், அந்த டெலிவரி ஊழியருக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவித்து வருகின்றனர்.

error: Content is protected !!