கோவை மாவட்டம் காந்திபுரம் அடுத்த 100 அடி சாலையில் கடைக்கு சென்றவரின் வாகனத்தில் இருந்த செல்போன் மற்றும் முக்கிய பொருட்களை திருடி சென்ற மர்மநபர்.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகர காவல் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாநகர், மற்றும் புறநகர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை ஆங்காங்கே நிறுவி வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் நேற்று காந்திபுரம் 100 அடி சாலையில் ஒரு கடையின் முன்பாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு ஒரு நபர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டு கொண்டிருந்த டிப்டாப் ஆசாமி, சற்று நேரத்தில் அவரது வாகனத்தை திறந்து அவரது வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள், மற்றும் செல்போன்களை திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
