“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் விஜய் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், “ஆங்கிலேயர்களிடம் இருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தி சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் வ.உ.சி. இந்தியர்களின் தன்னம்பிக்கை, தற்சார்பு உணர்வை வளர்த்ததுடன், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
