ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காதலியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது, பெண்ணின் தாய் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்ட நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டு தகறாறில் முடிந்துள்ளது. ஆத்திரமடைந்த பெண்ணின் தாய், கொதிக்கும் எண்ணெய்யை இளைஞர் மீது ஊற்றியுள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
