தமிழ்நாடு அபாகஸ் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்கள் சங்கம், ஜீசோன் மற்றும் கிட்ஸ்பீஸ் கல்வி நிறுவனங்கள் இணைந்து உலக சாதனை மற்றும் சர்வதேச அபாகஸ்

போட்டியை திருச்சி பழைய மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அபாகஸ் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் சங்கத்தின் பயிற்சியாளரும் நிறுவன தலைவருமான செல்வமணி தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் ராயல் புக் ஆப் கோல்டு ரெக்கார்டர் முதன்மை தீர்ப்பாளர் கலாரத்தினம் முனைவர்.விக்னேஷ் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 855மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட அபாகஸ் போட்டி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 3,6,8,9,12 வைதிக்குட்பட்ட மாணவ மாணவிகள் தனிநபர் உலக சாதனை போட்டிகள் நடைபெற்றது.
நடைபெற்ற போட்டிகளில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு, திருச்சி, சென்னை, தென்காசி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, திண்டிவனம், நாமக்கல், செங்கல்பட்டு, பெரம்பலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
உலக சாதனையில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
