திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர் கே.என்.ரவிச்தந்திரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தனர்.
சென்னையில் அடையாறு, ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், திருவான்மியூர் உள்பட 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தது.
சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பார்ட்டி ஃபண்ட் வாங்கியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். திருச்சி தில்லை நகரில் 5ஆவது குறுக்குத் தெருவில் இருக்கும் கே.என்.நேருவுக்கு சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தனர். காலை 7 மணி முதலே லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை, திருச்சி, கோவை என 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த தகவலறிந்த மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக பிரமுகர்கள், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கே.என்.நேருவின் வீட்டின் முன் குவிந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து கே.என். நேரு வீட்டில் இருந்து வெளியே வந்த போலீசார் அங்கிருக்கும் கட்சியினரை அப்புறப்படுத்தினர்.
திருச்சியில் 3 இடங்களில் கே.என்.நேரு சகோதரர் கே.என்.ரவிச்தந்திரன், திருச்சி சீனிவாச நகரில் உள்ள மாநகராட்சி அதிகாரி சிவபாதம், கே.என்.நேரு உள்பட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு செய்தது. சுமார் காலை 8 மணி முதல் மதியம் 3.30 மணி வரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை செய்து நிறைவானது. இதனை தொடர்ந்து முன்னாளர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில் தனது வீட்டிலிருந்து பைல் ஒன்று மட்டும் எடுத்து சென்றதாக கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே என் நேரு அளித்த பேட்டியில்..,
தமிழ்நாடு வருமானவரித்துறையில் இருந்து 8 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள் எங்களிடம் சொன்னது டென்டரில் தவறு நடந்துள்ளது அதன் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சோதனை நடத்த வேண்டும் என கூறினார்கள் சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூறினோம் திருச்சி மற்றும் சென்னை எனது சகோதரர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை அலுவலகத்தில் இருந்த கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டனர் தனது சகோதரர் வரவு செலவு கணக்கு எழுதி வைத்திருந்தார் அதை எடுத்துக் கொண்டு விட்டனர் என்னிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டனர்.
என் மீது மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
8 மணியிலிருந்து 3மணி வரை எங்களிடம் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தோம்.
டெண்டர் விஷயமாக நான் எதுவும் தவறாக செயல்படவில்லை அமலாக்கத்துறையில் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலைமையில் உள்ளது. இது புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக எந்த ஆதாரமும் அவர்கள் கைப்பற்றவில்லை தொடர்ந்து அவர்கள் சொல்வதற்கு ஒத்துழைப்பு கொடுப்போம் பழைய ஒத்துழைப்பு குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை நீதிமன்றம் சென்று நிரபராதி என நிரூபிப்போம்.
அரசாங்கம் காவல்துறை எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள் நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் என கூறியுள்ளோம்.
அரசியல் நோக்கத்தோடு அச்சுறுத்தல் செய்யலாம் என்ற நோக்கில் இந்த சோதனை நடந்ததாக பார்க்கிறேன்.
சட்டமன்றத்தில் தவறுகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளோம் 110 நாட்களில் நடந்த விஷயங்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசினார் அதற்கு விளக்கம் கொடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
இது உறுதியாக அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைதான்.
என் வீட்டில் இது மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுகிறது ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சி எதிர்க்கட்சி சார்ந்தவர்கள் வீட்டில் கால் புணர்ச்சி காரணமாக சோதனை நடப்பது வழக்கம்.
எங்கள் தலைவர் ஸ்டாலின் பேசினார் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறினார்.
