சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ஷானு ஹனீஃப் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விசிக மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் இன்று (செப். 05) தங்களை திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் மு.க.ஸ்டாலின் திமுக கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
