Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் அருகே பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் திருச்சக்தி முற்றம் பகுதியை சேர்ந்த சுதாகர்என்பவருக்கு மூன்று குழந்தைகள் இதில் ரித்திக் வயது (11). இவன் சோழன் மாளிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.

இவனுக்கு கடந்த நான்கு நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு கொல்லப்புற பகுதியிலிருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கத்தியவாறு வீட்டை நோக்கி ஓடிவந்துள்ளான் அப்போது சிறிது தூரம் வந்தவுடன் கீழே விழுந்து உள்ளான்
அவனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது அந்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அந்த பள்ளி மாணவன் இறந்துள்ளான்

ரித்திக்கிற்கு அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ராகவிகா என்ற சகோதரியும் பட்டீஸ்வரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் விஷால் என்ற சகோதரனும் உள்ளனர்.

ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!