மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் விஜய்யால் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கல்லணையை வந்தடைந்ததைத் தொடர்ந்து, டெல்டா பாசனத்திற்காக அமைச்சர்கள் தண்ணீரைத் திறந்து வைத்தனர். காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் மற்றும் கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் வினாடிக்கு மொத்தம் 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெறவுள்ளன.
