Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல்

உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல்

மாதம் தோறும் தங்களுக்கு வரும் 1500 ரூபாய் உதவி தொகையை உயர்த்தி தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு வழங்கப்படும் 1500 ரூபாய் உதவித்தொகையை 6000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த போராட்டத்தை நடத்தினர்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் 5500 முதல் 6500 வரை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருவதாகவும் தமிழ்நாட்டில் மட்டும்தான் மிகவும் குறைவாக அதாவது 1500 ரூபாய் மட்டுமே உதவித்தொகை வழங்குவதாக குற்றம் சாட்டினர்.

சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு அறிவிப்பையும் இந்த அரசு வெளியிடவில்லை எனவும் இன்று மற்றும் நாளை நடக்கும் சட்டப்பேரவை கூட்டங்களில் தங்களுக்கு உதவித்தொகை குறித்து அறிவிப்புகள் எதுவும் வரவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டம் பெருமளவில் நடைபெறும் என கூறினர்.

மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தின் முன்புள்ள சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். முன்னதாக எடுத்து வந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல் சேர் ஏற்றும் வசதி இல்லாததாகவும் தங்களை கைது செய்ய வரும் காவல்துறையினர் தாழ்வான தரைத்தளம் கொண்ட பேருந்து எடுத்து வராமல் சாதாரண பெருமையை எடுத்து வந்தால் நாங்கள் எப்படி அதில் ஏற முடியும் என்னும் கேள்விகளையும் எழுப்பினர்.

error: Content is protected !!