சென்னை பெசன்ட் நகரில் கடந்த செப்.5-ம் தேதி தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன. படுகொலைக்கு பிறகு கொலையாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் கத்தியை வைப்பது போன்றும், அந்த வாகனத்தை அவர்கள் எடுத்து செல்வது போன்றும் அதில் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த புதிய வீடியோ ஆதாரங்கள் வழக்கில் கூடுதல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
தவெக நிர்வாகி படுகொலை: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியானது
