வேலூர்: காட்பாடியில் பூட்டி இருந்த வீட்டில் 36 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். சொகுசு காரில் வந்து திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. கைதான முத்துவேல் கார்த்திக் – பிரபாவதி தம்பதி, பல இடங்களில் வீட்டை வாடகைக்கு எடுத்து இது போன்ற கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தகவல் வெளியாகியுள்ளது.
