நேபாளத்தில் ஆக.26-ம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1400-ஐ எட்டியுள்ளது. 5,000-க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இமயமலையில் உள்ள பனியாறு திடீரென உருகி வெள்ளமாக பெருக்கெடுத்து சேறு சகதியுடன் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கின. இதுவரை 13,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
