தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவனக் காவலாளி ரெனால்டு (38), மதுப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
