Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் ஒன்றியம் வேடல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் 73 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் சினேகா பேசியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளின் விளை நிலத்தின் பட்டா நகல் மற்றும் சிட்டா அடங்கல், ஆதார், வங்கி புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கொள்முதல் நிலையங்களில் வழங்கி e-DPC மூலம் பதிவேற்றம் செய்து விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விவசாயிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்தவுடன் நெல் கொள்முதல் நிலை யங்களில் நெல்லை விற்பனை செய்துகொள்ளலாம். ெநல் கொள்முதல் நிலையத்தின் பெயர், கொள்முதல் செய்யப் படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். குறுஞ்செய்தி அடிப்படையில் நீண்டநேரம் காத்திருக்காமல் உரிய காலத்தில் நெல்லை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நெல் ரகம் ஒன்றிய அரசின் அடிப்படை ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.2461. தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.289. மொத்தம் ரூ.2750. சன்ன ரகம் ரூ.2,461, பொது ரகம் ரூ.2,441. மேலும் பதிவு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான கிரய தொகை 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை எடை ேபாடவும், தூற்றவும் மற்றும் கோணிகளை தைக்கவும் தமிழக அரசு கூலி வழங்குவதால் யாரேனும் பணம் கேட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தவேண்டும்.

மேலும் புகார் தெரிவிக்க ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டி மற்றும் விழிப்புணர்வு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள தொலைபேசி எண்களில் குறைப்பாட்டை தெரிவிக்கலாம். ஒரு மூட்டை நெல்லின் எடை சாக்குடன் சேர்த்து ரூ.40.580 கி.கிராம் உள்ளதா என்பதை சரிபார்க்கவேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் செயல்படும். மேலும் தகவலுக்கு மண்டல மேலாளர்-944352078, துணை மேலாளர் (தரக்கட்டுபாடு) (பொ)-8098312185 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்களில் (18005993540) தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!