திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்காக LIC உடன் இணைந்து ஒரு இன்ஷூரன்ஸ் திட்டத்தைத் திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. SSD, ரூ.300 கட்டண தரிசன டோக்கன் பெற்றவர்கள் உள்பட, அனைத்து பக்தர்களுக்கும் இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் பொருந்தும். இதன்படி விபத்து மரணத்திற்கான இன்ஷூரன்ஸ் தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்ந்துள்ளது. முதல்முறையாக இயற்கை மரணத்திற்கும் ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
