கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக நீடித்து வருகிறது.
அரசாணை எண் 62-ன்படி ஊதியம் வழங்க வேண்டும், பணிச்சுமையை குறைக்க வேண்டும், போனஸ் மற்றும் சம்பளத்துடன் கூடிய ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், CITU சங்கம், உழைப்போர் உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
பகல் , இரவு நேரத்திலும் போராட்டக் களத்தை விட்டு செல்லாமல், அங்கேயே தங்கி தூங்கியும் தூய்மை பணியாளர்கள் நான்காவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும், தமிழக முதலமைச்சர் தலையிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
