கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2012 முதல் இதுவரை ரூ.6 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று 8 பேருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் கதிரேசன், அரியலூர் ராஜேந்திரன், நாமக்கல் மோகன், கோவை சரண்யா, ஈரோடு சுப்பிரமணியம், தர்மபுரி தங்கவேல், கிருஷ்ணகிரி கிருஷ்ணன், கரூர் பத்மநாதன் ஆகியோருக்கு தலா ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது.
