Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முட்டை விலை 5 நாளில் 30 பைசா உயர்வு..!

முட்டை விலை 5 நாளில் 30 பைசா உயர்வு..!

நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூலை 18ம் தேதி உச்சபட்ச விலையாக ஒரு முட்டை ரூ. 6.80 ஆனது. பின்னர் படிப்படியாக சரிவடைந்து கடந்த ஆக. 22ம் தேதி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் முட்டை விலை தொடர்ந்து அதே விலையில் நீடித்தது. கடந்த செப். 6ம் தேதி முட்டையின் விலை 5 பைசா உயர்ந்து ரூ. 5.25 ஆனது. அதன்பிறகு நாள்தோறும் 5 பைசா வீதம் உயர்ந்து, 9ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 5.40 ஆனது.

இந்த நிலையில் இன்று மாலை மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

கோழி விலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 118 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!