கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என கூறி, இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
இதன் ஒரு பகுதியாக, 4 தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், அரசாணை எண் 62-ன் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும், பணிச்சுமையை குறைக்க வேண்டும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
