ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காக முதலமைச்சர் விஜய் பரப்புரை செய்வார் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவ், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். எங்கள் கூட்டணி 40க்கு 40 வெல்லும். ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். அதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள் என்று கூறினார். தமிழகத்தில் தவெக தலைமையில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
