Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் ஆய்வு செய்யும் இடத்தில் கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

அமைச்சர் ஆய்வு செய்யும் இடத்தில் கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

​12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமரிசையாகக் கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழா, கடைசியாக 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மகாமகப் பெருவிழா எதிர்வரும் 2028-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

​இந்த விழாவை மிகச் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவது குறித்து, கும்பகோணத்தில் இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் வேளாண்மைத் துறை

அமைச்சர் வினோத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நாகேஸ்வரன் கோவில், ராமசாமி கோவில் உள்ளிட்ட பல முக்கிய இடங்களைப் பார்வையிட்ட அமைச்சர்கள், தொடர்ந்து கும்பகோணம் மகாமகக் குளப் பகுதியிலும் ஆய்வு நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

​அமைச்சர்களின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மகாமகக் குளத்தின் அருகே திடீரென காவி உடை அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர்,

கையில் கூர்மையான கத்தியை வைத்துக்கொண்டு அமைச்சர் வரும் இடம் அருகே சுற்றி வந்தார் மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை கத்தியால் குத்துவது போலச் செய்கை செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.

​அமைச்சர்களின் ஆய்வுப் பணிக்கு நடுவே, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நபர் ஒருவர்

கத்தியுடன் சுற்றித் திரிந்த இந்தச் சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே கடுமையான அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த நபர் போதையில் இவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது மனநலம் பாதித்தவரா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

error: Content is protected !!