விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை, மதுரை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் வழக்கத்தைவிட ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விமான டிக்கெட்டுகளுக்கான தேவை உயர்ந்துள்ளது.
