தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் சீமான் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூரில் சிப்காட் என்ற பெயரில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். விமான நிலையத்தை ரத்து செய்துவிட்டு இப்போது சிப்காட்டை அமைக்கிறார்கள் என்றார்.
