ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் மதில் சுவர் மீது சிறுத்தை ஒன்று உறுமியபடி அமர்ந்திருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிறுத்தையை பார்த்ததும் அச்சமடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
