Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ரூ.42,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னையில் ரூ.42,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியை சேர்ந்த சிவா என்பவர் அமைந்தகரை கலெக்டர் காலனியில் சொந்தமாக பால்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவரது பால் கடைக்கு வந்த அலமேலு என்ற பெண் ரூ. 500 கள்ளநோட்டை கொடுத்து சில்லறை தருமாறு கேட்டுள்ளார். அப்பொழுது சிவா அந்த பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார்.

உடனடியாக இது குறித்த அமைந்தகரை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் மேலும் இரண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது.

சதேகமடைந்த போலீசார் அலமேலுடைய வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது அவருடைய வீட்டில் ரூ. 42,000 கள்ள நோட்டுகள் இருந்துது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக அலமேலுவை போலீசார் கைது செய்து விசாரித்த போது குப்பை தொட்டியில் கள்ள நோட்டுகள் கிடைத்ததாக கைதான அலமேலு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்த கள்ளநோட்டு கும்பல் தொடர்புடையதா அல்லது அந்த பெண் கூறியதை போல் குப்பை தொட்டியில் கிடைத்ததா என்ற பல கோணங்களில் போலீசார் அலமேலுவிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!