பீகாரில் உள்ள கங்கை ஆற்றில் சுமார் 200 பேருடன் சென்றுகொண்டிருக்கும் படகு ஒன்றின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பெரும் உயிரிழப்பு நேரிடக்கூடும் என்ற கவலை எழுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அடிக்கடி நிகழும் படகு விபத்துகளைச் சுட்டிக்காட்டி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகப் பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிக சீற்றத்துடன் காணப்படும் ஆற்றில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது.
