டில்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று (செப்.12) சந்தித்து பேசினார். இம்மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலக தலைவர்களில், இந்திய குடியரசுத் தலைவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற ஒரே சர்வதேச தலைவர் ஈரான் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் இருநாடுகள் இடையிலான இருதரப்பு உறவு மற்றும் வணிக மேம்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.
